Skip to main content

Posts

Showing posts from August, 2017

அவரைக்காய் பொரியல்/Avarakkai Poriyal/ Broad beans Poriyal/ Broad Beans stir-fry/ Chettinad Avarakkai Poriyal

தேவையான பொருட்கள்: அவரைக்காய் - 2 கப் (நறுக்கியது) வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது) வரமிளகாய்-5 உப்பு - தேவையான அளவு தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 3 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் சீரகம் -1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் வரமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் நறுக்கிய அவரைக்காயை  சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பிறகு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும் அவரைக்காய் நன்கு வெந்து தண்ணீர் முற்றீலும் வற்றியவுடன்  அதில் துருவிய  தேங்காய்  மற்றும் கொத்தமல்லி  சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கினால், அவரைக்காய் பொரியல் தயார் .....

வாழைப்பூ பருப்பு கூட்டு/Vazhaipoo Kootu/ Plantain Flower Kootu/Banana Flower Kootu

தேவையான பொருட்கள்: வாழைப்பூ - 1 துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு போட்ட நீரில் போட்டு வைக்கவும்.  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். சிறிது மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர்  வேக வைக்கவேண்டும் . வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.  பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், சுவையான வாழ

பருப்பு ரசம்/Paruppu Rasam/dal rasam

தேவையான பொருட்கள்: குழைய வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப் புளி - 1 சிறு உருண்டை தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 மிளகு - அரை டீஸ்பூன் பூண்டு -7 பல் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு  - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது செய்முறை: புளியை 2 டம்ளர் கழனி தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டவும். ஒரு மிக்சி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, பச்சை  மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.   பின் ஒரு வாணலி  வைத்து நல்லெண்ணெய்  ஊற்றி சூடானதும் தாளிப்பதற்கு  கொடுத்துள்ள  பொருட்களை  போட்டு தாளித்து  அரைத்த மசாலாவை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் சிறிது மஞ்சள் தூள், புளித் தண்ணீர்,  குழைந்த துவரம் பருப்பு, உப்பு மற்றும் தண்ணீர்  சேர்க்கவும். ரசம் நுரைகட்டி வரும் போது, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் பருப்பு ரசம் தயார் .

பசலை கீரை பருப்பு கூட்டு/ Pasalai Keerai Kootu/ Spinach kootu/ dal palak

தேவையான பொருட்கள்: பசலை கீரை- 1 கட்டு துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கி

குதிரைவாலி உப்புமா/Kuthiraivali upma/ Barnyard millet upma/ Millet upma

தேவையான பொருட்கள்: குதிரைவாலி  - 1 கப் கேரட்-1 வெங்காயம் - 10 காய்ந்த மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிது துருவிய தேங்காய் - சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது எண்ணை - 4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உப்பு -  தேவைக்கேற்றவாறு செய்முறை: ஒரு குக்கரில்  எண்ணையை விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப்போட்டு, பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட் போட்டு நன்கு வதக்கவும். பின் குதிரைவாலி மற்றும் 2 கப் தண்ணீரும், சிறிது துருவிய தேங்காய், கொத்தமல்லி  மற்றும்  உப்பும் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.  கொதிக்க ஆரம்பித்ததும் மூடி வைத்து வேக விடவும். பின் 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். குதிரைவாலி உப்புமா தாயர் ....

முருங்கைகாய் சாம்பார்/ Murungaikai Sambar/ Murungaikai Kuzhambu/ Drumstick Sambar/ Drumstick Curry

தேவையான பொருட்கள்: முருங்கைகாய்- 2 உருளைக்கிழங்கு -2 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு...... நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி  செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கக்காய், உருளைக்கிழங்கு,  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு

அரைக்கீரை பொரியல்/ Arai Keerai Poriyal/ Greens stir fry/ Tropical amaranth poriyal

தேவையான பொருட்கள்: அரைக்கீரை  - 2 கப் வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது) சிவப்பு மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு துருவிய தேங்காய் தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு-1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு -1/4 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி   - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம்  சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள அரைக்கீரை  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர்  சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன்  அதனுடன் சிறிது துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், அரைக்கீரை பொரியல் தயார் .....

பச்சை பயிறு புளிகுழ‌ம்பு/Pachai payaru PuliKuzhambu/ Green gram Curry/ Moong Dal Gravy/Whole Green Gram Dhal Curry

தேவையானப் பொருட்கள்: பச்சைபயிறு -2 கப் வெங்காயம் - 10 தக்காளி - 1 பூண்டு -10 பச்சை மிளகாய் - 3 ‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன் தனியா தூள்  -2 ஸ்பூ‌ன் கரம்மசாலா -1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் ‌கடுகு -1/4 ஸ்பூன்  உளுந்து -1/4 ஸ்பூன் வெந்தயம்  - 1/4 ஸ்பூன் புளி- 1/4 கப் உ‌ப்பு அரைப்பதற்கு: தேங்காய்- 1/2 கப் சீரகம்  -1/4 ஸ்பூன் பூண்டு -3 கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி செய்முறை: பச்சை பயறுவை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊ‌ற்றவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ‌‌சோம்பு, வெந்தயம் போ‌ட்டு பொரிந்ததும்  கறிவேப்பிலை,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம். த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம்  ‌மிளகா‌ய் தூ‌ள், தனியா தூள்,  கரம்மசாலா, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம். ஊ‌றிய  பச்சை பயறுவை போ‌ட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல் மற்றும்  தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வையு‌ங்க‌ள். பிறகு அரைத்த தேங்காய் 

வாழைக்காய் கடலை பருப்பு கூட்டு/Vazhakkai Kadalaiparuppu Kootu/ Vazhakkai kootu/ Raw banana kootu/Raw banana Curry/Chettinadu Vazhakkai Kadalaiparuppu Kootu

தேவையான பொருட்கள்: வாழைக்காய்   - 1 கப் கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 தக்காளி -1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் வாழைக்காய் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு   வேகவைத்து எடுத்து கொள்ளவும்.   ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம்   மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை  சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி நன்கு வேகவைக்கவும். பின்  அதில்  வேகவைத்துள்ள வாழைக்காய் சேர்த்து  நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்  தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கிளற  வைக்க வேண்டும்.  பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்

பொண்ணாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு/Red Ponnanganni keerai Paasi Paruppu Kootu/ Dwarf Copperleaf or Alternanthera sessilis Moong Dal / Copperleaf Kootu/ Copperleaf Curry

தேவையான பொருட்கள்: பொண்ணாங்கண்ணி கீரை  - 1 கப் பாசிப் பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 10 (நறுக்கியது) மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும்  மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பொண்ணாங்கண்ணி கீரை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் பாசிப்பருப்பை சேர்த்து,  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.  வெந்தவுடன் அத மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பொண்ணாங்கண்ணி கீரை  பருப்பு க

கோதுமை ரவா உப்புமா/Godhumai rava upma /Cracked Wheat Rava Upma/Broken Wheat Rava Upma

தேவையான பொருட்கள்: கோதுமை ரவா - 1 கப் வெங்காயம் - 10 காய்ந்த மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிது துருவிய தேங்காய் - சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது எண்ணை - 4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உப்பு -  தேவைக்கேற்றவாறு செய்முறை: முதலில் வெறும் வாணலியில் கோதுமை ரவாவைப் போட்டு, சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் எண்ணையை விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப்போட்டு, பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், 2 கப் தண்ணீரும், சிறிது துருவிய தேங்காய், கொத்தமல்லி  மற்றும்  உப்பும் சேர்த்துக் கலக்கி மூடி வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவாவைக் கொட்டிக் கிளறவும். அடுப்பைத் தணித்து, மூடி வைத்து வேக விடவும். அவ

தேங்காய் சட்னி/ Thengai chutney/ Coconut chutney

தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்) பச்சைமிளகாய் - 3 வரமிளகாய்-2 இஞ்சி - அரை விரல் நீளம் பொட்டுக்கடலை -சிறிது பூண்டு-3 கறிவேப்பிலை -சிறிது உப்பு -தேவையானளவு கடுகு - 1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு -1/4 ஸ்பூன் எண்ணெய் - தேவைகேற்ப தண்ணீர் செய்முறை: தேங்காய், மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு மற்றும்  தண்ணீர் சேர்த்து  கொரகொரப்பாக அரைக்கவும். அடுப்பில் மிதமான சூடுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பில்லை, போட்டு தாளித்து அதை  மேலே அரைத்துள்ள கலவையில் கொட்டி இறக்கினால் தேங்காய் சட்னி தயார் .....

முட்டைபொடிமாஸ் /Muttai Podimas/Egg Stir Fry /Chettinad Egg Scramble /Egg Podimas

தேவையான பொருட்கள்: முட்டை -4 மிளகாய் தூள்- 1 டீஸ்பூன் பெப்பர் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி-1 சிவப்பு மிளகாய் - 4 மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு-1/4 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பில்லை செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு பொரிந்ததும் வெங்காயம், மிளகாய் மற்றும்  தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர்  போட்டு கிளறி இறக்கினால், முட்டைபொடிமாஸ் தயார் .....

கொத்தவரங்காய் பொரியல்/kothavarangai poriyal |/ Cluster beans stir Fry/Cluster beans Curry

தேவையான பொருட்கள்: கொத்தவரங்காய் - 1 1/2 கப் (நறுக்கியது) வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது) வரமிளகாய்-5 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் சீரகம் -1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3 டீஸ்பூன் கொத்தமல்லி செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தவரங்காய், மஞ்சள் தூள் சிறிது உப்பு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரில் உள்ள நீரை வைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் வரமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள கொத்தவரங்காயை  சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பின் அதில் துருவிய  தேங்காய் சேர்த்து கிளறி, மற்றும் கொத்தமல்லி  சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கினால், கொத்தவரங்காய் பொரியல் தாயர் .....

சுவையான கொழுக்கட்டை/Rice batter kolukattai/Kozhukattai/ Modak/Pidi Kozhukattai/coconut kozhukattai

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 4 ஆழாக்கு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை  கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து,  நிழலில் உலர்த்தவும். பின் அதனை  மிக்சியில் போட்டு  மாவாக அரைக்கவும்.   பிறகு, அதனை கட்டிகள் இன்றி நன்கு சலிக்கவும். கட்டிகளை மிக்சியில் அரைத்து சலித்து, மாவுடன் சேர்க்கவும். இந்த மாவை சற்று அதிகமாகச் செய்து, 2 மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். தேவையான போது சிறிது மாவு எடுத்து கொழுக்கட்டை செய்யலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது மாவை எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, ஒரு கரண்டிக் காம்பால் கிளறவும். மாவு நன்கு சேர்ந்து கெட்டியாக ஆனதும், நன்கு சேர்த்துப் பிசையவும். மாவை கொழுக்கட்டை அச்சில் அல்லது கையால் பிடித்து  இட்லி  தட்டுகளில் வைத்து, இட்லி பானையில் வேக வைத்தால் சுவையான கொழுக்கட்டை  தயார் ...

மிளகின் மருத்துவ குணங்கள்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான மருந்து மிளகு. மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால்தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம். உணவில் காரத்தை கூட்டவும், கூடுதல் சுவையை ஏற்படுத்தவும் கருப்பு மிளகு பயன்படுகிறது. ஆனால், எளிமையான இந்த மிளகை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பல மருத்துவ காரணங்களுக்காக நம் முன்னோர்கள் உணவுகளில் பயன்படுத்தினர். 1. மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது. மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை மஞ்சளுடன் கலக்கும்போது, புற்று நோய் எதிர்ப்பு   அதிகரிக்கிறது . 2. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். (மருந்து வீறு என்பது கடும்  மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல் போன்றவையாகும்.) 3. அரை கிராம் மிளகுப் பொடியுடன

சர்க்கரை அல்லது இனிப்பு பொங்கல்/ இனிப்பு பொங்கல்/ கோவில் சர்க்கரை பொங்கல்/ Inippu Pongal/ Sweet pongal/| Chakkara pongal/ Sakkarai pongal

தேவையான பொருட்கள்: பச்சரிசி- 1 கப் பாசி பருப்பு -1/2 கப் வெல்லம்  or  கருப்பட்டி - 2 கப் முந்திரி -25 கிராம் உலர் திராட்சை- 10 நெய்- 3 ஸ்பூன்  சுக்கு - சிறிது         ஏலக்காய் - 10 தேங்காய் - 1 தண்ணீர் -5 கப் உப்பு -சிறிது செய்முறை: அரிசி மற்றும்  பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு 30 நிமிடம் ஊறவைத்து  நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.  வெல்லத்தை சிறிது தண்ணீர்  மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ச்ச்சி கொள்ளவும்.  ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்  அல்லது குக்கரில்  தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.  கொதிக்கும் போது அரிசி மற்றும் பாசிப்பருப்பை, சிறிது உப்பு (not more)  போட்டு நன்கு வேக விடவும். அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில்  காய்ச்சிய வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்கு கிளறிய  பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு

ரவா லட்டு/ Rava laddu/ Rava Ladoo

தேவையான பொருட்கள்: ரவை - ஒரு கப் (150 கி) சர்க்கரை - அரை கப் (75 கி) துருவிய தேங்காய் - அரை கப் முந்திரி - 7 உலர்ந்த திராட்சை - சிறிது ஏலக்காய் - 1 நெய் - தேவைக்கு ஏற்ப பால் - தேவைக்கு ஏற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர், அதே கடாயில் துருவிய தேங்காயை ஈரம் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயுடன், வறுத்து வைத்துள்ள ரவை, முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்த்து  ஒன்றாக கலக்கவும். பிறகு அந்த கலவையில் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும். பிறகு கலவையை வேறொரு தட்டுக்கு மாற்றி இளஞ்சூட்டிலேயே சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.  பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து

எலுமிச்சை சாதம்/ Elumichai Sadham/ Lemon Rice

தேவையான பொருட்கள்: வடித்த சாதம்- 2 கப் எலுமிச்சை சாறு - 3 தாளிக்க: நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய்வற்றல்- 2 பெருங்காயம்- சிறிதளவு மஞ்சள் தூள்- சிறிதளவு உப்பு- சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி செய்முறை: சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது). வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும். எழுமிச்சை சாறு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்  ஊற்றி கடுகு, உழுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு பிழிந்த எழுமிச்சை சாறை ஊற்றி மஞ்சள்,  பெருங்காயம்  மற்றும் தேவையான அளவு  உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். ஆறின சாதத்துடன் எழுமிச்சை கரைசலை கொட்டிக் கிளறவும்.  கொத்தமல்லி தூவிப் கிளறவும் சுவையான எலுமிச்சை சாதம் தயார்...... கலர்புல்லாக இருக்கவேண்டும் என்றால் துருவிய கேரட்டை துவி அலங்கரிக்கலாம்.  அவித்த முட்டை,  சிக்கன், மட்டன், மீன் பிரை, மசால் வடையும் செய்தால் கூட நல்ல

சுரைக்காய் சாம்பார்/Sorakkai Sambar/ Bottle Gourd Moong Dal Sambar / Sorakkai Kuzhambu/ Bottle Gourd Curry

தேவையான பொருட்கள்: சுரைக்காய்- 1 கப் பாசி பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு...... நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி  செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் சுரைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால் சுவையான சுரைக்காய் சாம்பார் தயார் .......

ஈஸியான இடியாப்பம்/ Idiyappam/ Idiyappam with Rice flour/ Nool Puttu/ String Hopper/ Sevai

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 4 ஆழாக்கு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை  கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து,  நிழலில் உலர்த்தவும். பின் அதனை  மிக்சியில் போட்டு  மாவாக அரைக்கவும்.   பிறகு, அதனை கட்டிகள் இன்றி நன்கு சலிக்கவும். கட்டிகளை மிக்சியில் அரைத்து சலித்து, மாவுடன் சேர்க்கவும். இந்த மாவை சற்று அதிகமாகச் செய்து, 2 மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். தேவையான போது சிறிது மாவு எடுத்து இடியாப்பம் செய்யலாம். இடித்த மாவை வறுத்தும் இடியாப்பம் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது மாவை எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, ஒரு கரண்டிக் காம்பால் கிளறவும். மாவு நன்கு சேர்ந்து கெட்டியாக ஆனதும், நன்கு சேர்த்துப் பிசையவும். மாவை இடியாப்பக் குழலில் போட்டு, இட்லி  தட்டுகளில் பிழிந்து, இட்லி பானையில் வேக வைத்தால் சுவையான இடியாப்பம் தயார் ...

பட்டாணி மசாலா / Pattani Masala/ Green Peas Masala/ Green Peas Masala Curry - Side Dish for Chapathi

தேவையான பொருட்கள்:  பட்டாணி    - 1 கப் (ஊறவைத்து கொள்ளவும்) வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3(நீளமாக கீறியது) தக்காளி -1 (நறுக்கியது) பூண்டு -5 பல் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் -2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சோம்பு  - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுத்தம் பருப்பு,  சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம்,  பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பிறகு ஊற வைத்த  பட்டாணி போட்டு மிஃஸ் பண்ணவும்.  இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்  தூள் சேர்த்து வதக்கவும். பின் அத்துடன் தண்ணீர் சேர்த்து  குக்கரை முடி மூன்று விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்து சிறிதளவு துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவி  கிளறி இறக்கினால், பட்டாணி  மசாலா தயார் ....

பீச் ஸ்டைல் காரா பொறி/Beach style kara pori/ Masala kara pori

தேவையான பொருட்கள் : பொறி - 250 கிராம் வறுத்த கடலை  - 1/2 கப்  துருவிய கேரட்  - 3 டீஸ்பூன்  துருவிய மாங்காய்  – 4 டீஸ்பூன் வெங்காயம்  - 2 (பொடியாக நறுக்கியது)   மிளகாய் தூள்  - 2 உப்பு- தேவையான அளவு லெமன் சாறு  – 1 டீஸ்பூன்   கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை செய்முறை : பொறி, வறுத்த கடலை மற்றும் மிளகாய் தூள் தவிர மற்ற  பொருட்களை (துருவிய கேரட், துருவிய மாங்காய், வெங்காயம், உப்பு, லெமன் சாறு, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை) ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து கொள்ளமவும். பின் பொறி, வறுத்த கடலை மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை மசாலாவுடன் சேர்த்து கலந்தால் சுவையான பீச் ஸ்டைல் காரா பொறி  தயார்..

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல

பீர்க்கங்காய் சட்னி/ Peerkangai Chutney/ Ridge gourd Chutney

தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய்  - 1  (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு-  5 சிவப்பு மிளகாய் - 4 துருவிய தேங்காய் -சிறிது உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, மிளகாய்,  வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்தவுடன்  துருவிய தேங்காய் மற்றும்  கொத்தமல்லி போட்டு கிளறி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின்னர்  மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். சுவையான  பீர்க்கங்காய் சட்னி  தயார் .....

பொண்ணாங்கண்ணி கீரை முட்டை பொரியல் / Red Ponnanganni keerai Muttai Poriyal / Dwarf Copperleaf or Alternanthera sessilis Egg Stir Fry /Chettinad Egg Scramble with Dwarf Copperleaf/Alternanthera sessilis Egg Podimas

தேவையான பொருட்கள்: பொண்ணாங்கண்ணி கீரை - 2 கப் முட்டை -3 பெப்பர் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சிவப்பு மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை  - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம்  சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பொண்ணாங்கண்ணி கீரை  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு வதக்க வேண்டும். பொண்ணாங்கண்ணி கீரை நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பொண்ணாங்கண்ணி கீரை முட்டை பொரியல் தயார் .....

வெண்டைக்காய் மசால் குழம்பு / கூட்டு/Ladies finger kootu/ Ladies finger Curry/ Ladies finger gravy/bhindi masala gravy/bhindi Curry

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய்   - 2 கப் (நறுக்கியது) வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு- 10 பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) தக்காளி -2 (நறுக்கியது) துருவிய தேங்காய் -சிறிது உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் -3 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்  கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு -1/2 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் நன்கு வதக்கி  தனியாக எடுத்து கொள்ளவும்.  பிறகு  மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலை  போட்டு வதக்கவும்.  பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, துருவிய தேங்காய்  மற்றும் சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக  போட்டு நன்கு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். பிறகு  மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள

கொள்ளு பயிறு மசாலா / Kollu payaru Masala/ horse gram lentil curry/ sprout horse gram Masal/ Kana payaru Masala

தேவையான பொருட்கள்: கொள்ளு    - 1 கப் (ஊறவைத்து கொள்ளவும்) வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3(நீளமாக கீறியது) தக்காளி -1 (நறுக்கியது) பூண்டு -5 பல் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் -2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சோம்பு  - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுத்தம் பருப்பு,  சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம்,  பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பிறகு ஊற வைத்த கொள்ளு போட்டு மிஃஸ் பண்ணவும்.  இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்  தூள் சேர்த்து வதக்கவும். பின் அத்துடன் தண்ணீர் சேர்த்து  குக்கரை முடி மூன்று விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்து சிறிதளவு துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவி  கிளறி இறக்கினால், கொள்ளு பயிறு  மசாலா தயார் ....

வெண்டைக்காய் பருப்பு கூட்டு/Ladies finger paruppu kootu/ Ladies finger Toor Lentil/Ladies finger Poriyal / Ladies finger Toor Lentill Stir Fry/Ladies finger Kootu/Ladies finger sabzi

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய்   - 2 கப் (பொடியாக நறுக்கியது) துவரம்  பருப்பு  - 1/4 கப் (வேகவைத்துது) வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) தக்காளி -2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் நன்கு வதக்கி  தனியாக எடுத்து கொள்ளவும்.  பிறகு  மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளியை  போட்டு  நன்கு வதக்கவும். பிறகு வதக்கிய  வெண்டைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் மஞ்சள் தூள்  சேர்த்து  நன்கு வதக்க வேண்டும்.  பிறகு வேகவைத்த துவரம்பருப்பை  சேர்த்து தேவையான

மிருதுவான இட்லி/மிருதுவான இட்லி மாவு /miruthuvana idly / idly batter for soft idly/fluffy idly

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி -3 கப் பச்சரிசி -1/4 கப் உளுந்து -1 கப் வெந்தயம் -1/2 டீஸ்பூன் உப்பு -தேவையானளவு தண்ணீர் - -தேவையானளவு செய்முறை: பாத்திரத்தில்  தண்ணீர்  போட்டு  இட்லி அரிசி மற்றும் பச்சரிசி  போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் மற்றொரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு தனித்தனியாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு போட்டு புளிக்க வைக்கவும்.  5 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி அவித்து எடுத்தால் மிருதுவான இட்லி தயார்...

முட்டை பொரியல் /Muttai Poriyal /Egg Stir Fry /Chettinad Egg Scramble /Egg Podimas

தேவையான பொருட்கள்: முட்டை -4 பெப்பர் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) சிவப்பு மிளகாய் - 4 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சீரகம் - 1 டீஸ்பூன் செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் சீரகம் போட்டு கிளறி இறக்கினால், முட்டை பொரியல் தயார் .....

காட்டு கீரை கடைசல் சாதம் / Kaatu keerai kadaisal sadham / Keerai kadaisal sadham/ Spinach curry Rice/ Kadaintha Keerai sadham / Mashed Spinach Rice/ Spinach Paruppu Masiyal Rice

தேவையான பொருட்கள்: சாதம்- 2 கப் காட்டு கீரை - 1 கட்டு வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்   வர மிளகாய் - 5 பூண்டு - 4 தக்காளி - 1 சாம்பார்  வெங்காயம் - 10 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் - 1 டீஸ்பூன் புளி தண்ணீர் - சிறிது பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை நெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் காட்டு கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு கொதித்ததும் நன்றாக கழுவி அலசி வைத்துள்ள கீரை,  வேகவைத்த துவரம் பருப்பு, மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், புளி தண்ணீர், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, கீரையை நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதனை மத்து கொண்டு நன்கு கடைந்த்து  கொள்ள வேண்டும்.  இதனை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்தால் காட்டு கீரை கடைசல் சாதம் தயார். 

அவரைக்காய் முட்டை பொரியல் / Avarakkai Muttai Poriyal / Broad Beans Egg Stir Fry /Chettinad Egg Scramble with Broad Beans/Broad Beans Egg Podimas

தேவையான பொருட்கள்: அவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது) முட்டை -2 பெப்பர் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சிவப்பு மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள அவரைக்காய்  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு வதக்க வேண்டும். அவரைக்காய் நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், அவரைக்காய் முட்டை பொரியல் தயார் .....

வெண்டைக்காய் மசால் பஃரை / Ladies finger Masal fry/ Bendakaya fry/ Bhindi Masal fry/ Ladies finger fry

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய்   - 2 கப் ( நறுக்கியது) வெங்காயம் - 10 (நறுக்கியது) வர மிளகாய் -5 பூண்டு-5 சீரகம் - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய்- சிறிது  உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் மசாலா  தயாரித்து கொள்ளவும். ஒரு  மிக்சியில்  வர மிளகாய், பூண்டு,  சீரகம், துருவிய தேங்காய்  மற்றும் கறிவேப்பிலை  போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  சிறிது எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுத்தம் பருப்பு  மற்றும் கறிவேப்பிலை  போட்டு தாளித்து  நறுக்கிய வெண்டைக்காய்  போட்டு நன்கு வதக்க வேண்டும்.  பின் நறுக்கிய  வெங்காயம் மற்றும் சிறிது மஞ்சள்  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை   போட்டு  நன்கு  பிரட்டி விட வேண்டும். கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வெண்டைக்காய் மசால் பஃரை தயார் .....

பீன்ஸ் முட்டை பொரியல் / Beans Muttai Poriyall/ Beans and egg fry/ Beans Egg Stir Fry /Chettinad Egg Scramble with Beans/Beans Egg Podimas

தேவையான பொருட்கள்: பீன்ஸ்  - 1 கப் (பொடியாக நறுக்கியது) முட்டை -2 பெப்பர் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சிவப்பு மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு வதக்க வேண்டும். பீன்ஸ் நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பீன்ஸ் முட்டை பொரியல் தயார் .....

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு/ Peerkangai Paasi Paruppu Kootu/ Ridge gourd Moong Dal/Peerkangai Poriyal / Ridge gourd Kootu/ Ridge gourd Curry

தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய்  - 1 கப் பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் பாசிப்பருப்பை சேர்த்து,  2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால்,

கத்தரிக்காய் மொச்சைபயிறு புளிகுழ‌ம்பு/Kathirikai Mochai Payaru PuliKuzhambu/Brinjal Mochai Kottai Kara Kuzhambu/ Brinjal Mochai Curry

தேவையானப் பொருட்கள்: மொச்சைபயிறு -2 கப் கத்தரிக்காய்- 3 முருங்கக்காய் -1 வெங்காயம் - 10 தக்காளி - 1 பூண்டு -10 பச்சை மிளகாய் - 3 ‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன் தனியா தூள்  -2 ஸ்பூ‌ன் கரம்மசாலா -1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் சோம்பு -1/4 ஸ்பூன் வெந்தயம்  - 1/4 ஸ்பூன் புளி கரைசல் - 1/4 கப் உ‌ப்பு அரைப்பதற்கு: தேங்காய்- 1/2 கப் சீரகம்  -1/4 ஸ்பூன் பூண்டு -3 கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி செய்முறை: கருப்பு மொச்சையை வறுத்து இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊ‌ற்றவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் வெந்தயம் மற்றும் சோம்பு போ‌ட்டு பொரிந்ததும்  கறிவேப்பிலை,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம். த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம்  ‌மிளகா‌ய் தூ‌ள், தனியா தூள்,  கரம்மசாலா, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம். பின் கத்தரிக்காய், முருங்கக்காய் மற்றும் ஊ‌றிய  மொச்சையை போ‌ட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல

பீர்க்கங்காய் முட்டை பொரியல் / Peerkangai Muttai poriyal/ Peerkangai egg poriyal/ Ridge gourd egg poriyal/Ridge gourd Egg Podimas/ Ridge gourd Egg Curry/ Ridge gourd Egg Fry

தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய்  - 1 கப் (பொடியாக நறுக்கியது) முட்டை -2 பெப்பர் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சிவப்பு மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார் .....

சுரைக்காய் பருப்பு கூட்டு/Sorakkai Paasi Paruppu Kootu/ Bottle Gourd Moong Dal/Sorakkai Poriyal / Sorakkai Kootu/ Bottle Gourd Curry

தேவையான பொருட்கள்: சுரைக்காய்   - 1 கப் பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள சுரைக்காய்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் மஞ்சள் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால்,

வேர்க்கடலை சட்னி/Kadalai Chutney/ Peanut Chutney/ Groundnut Chutney/ Palli Chutney

தேவையான பொருட்கள் : காய்ந்த வேர்க்கடலை - 250 கிராம் வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 3  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு -3 தாளிப்பதற்கு .... நல்லெண்ணெய் -1 டீஸ்பூன் கடுகு-1/4 ஸ்பூன் உழுந்தம்  பருப்பு வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 1 கறிவேப்பிலை உப்பு - தேவையான அளவு செய்முறை : காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும். ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை,  தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்து பொடியாக அரைக்கவும். பின் தாளிப்பதற்கு  கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள  கடலையில்  போட்டு கிளறினால்  கெட்டியான வேர்கடலை சட்னி தயார்....

பீட்ரூட் பருப்பு கூட்டு/Beetroot paruppu kootu/ Beetroot Moong Dal/Beetroot Poriyal / Beetroot Moong Dal Stir Fry/Beetroot Kootu

தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட்   - 1 கப் பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்

பாலக்கீரை கூட்டு/ Palak Keerai Kootu/Spinach Dal gravy / Palak Dal

தேவையான பொருட்கள்: பாலக்கீரை - 1 கட்டு துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 1 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பாலக்கீரை கூட்டு ரெடி.....

கேரட் பருப்பு கூட்டு/Carrot paruppu kootu/ Carrot Moong Dal/Carrot Poriyal / Carrot Moong Dal Stir Fry/Carrot Kootu

தேவையான பொருட்கள்: துருவிய கேரட்  - 1 கப் பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய வைத்துள்ள கேராட்டை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கேரட் நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனு

தட்டாம் பயிறு புளிகுழ‌ம்பு/Thattam/Thatta Payaru PuliKuzhambu/Thattam Payaru Kara Kuzhambu/Karamani Curry

தேவையானப் பொருட்கள்: தட்டாம்பயிறு -2 கப் வெங்காயம் - 10 தக்காளி - 1   பூண்டு -10 பச்சை மிளகாய் - 3 ‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன் தனியா தூள்  -2 ஸ்பூ‌ன் கரம்மசாலா -1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்  நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் ‌கடுகு -1/4 ஸ்பூன்  உளுந்து -1/4 ஸ்பூன் வெந்தயம்  - 1/4 ஸ்பூன் புளி- 1/4 கப் உ‌ப்பு அரைப்பதற்கு: தேங்காய்- 1/2 கப் சீரகம்  -1/4 ஸ்பூன்  பூண்டு -3 பச்சை மிளகாய் -2 கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி செய்முறை: தட்டாம் பயறுவை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊ‌ற்றவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ‌‌கடுகு, உளுந்து, வெந்தயம் போ‌ட்டு பொரிந்ததும்  கறிவேப்பிலை,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம். த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம்  ‌மிளகா‌ய் தூ‌ள், தனியா தூள்,  கரம்மசாலா, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம். ஊ‌றிய தட்டாம் பயறுவை போ‌ட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல் மற்றும்  தண்ணீர

முட்டைகோஸ் பருப்பு கூட்டு/Muttai Gose paruppu kootu/Cabbage curry / Cabbage kootu

தேவையான பொருட்கள்: முட்டைகோஸ்  - 1 கப்  பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ்யை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். முட்டைகோஸ் நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், முட்டைகோஸ் பருப்பு கூட்டு ரெடி.....

மொச்சைபயிறு புளிகுழ‌ம்பு/Mochai Payaru PuliKuzhambu/Mochai Kottai Kara Kuzhambu/Mochai Curry

தேவையானப் பொருட்கள்: மொச்சைபயிறு -2 கப் வெங்காயம் - 10 தக்காளி - 1   பூண்டு -10 பச்சை மிளகாய் - 3 ‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன் தனியா தூள்  -2 ஸ்பூ‌ன் கரம்மசாலா -1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்  நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் ‌கடுகு -1/4 ஸ்பூன்  உளுந்து -1/4 ஸ்பூன் வெந்தயம்  - 1/4 ஸ்பூன் புளி- 1/4 கப் உ‌ப்பு அரைப்பதற்கு: தேங்காய்- 1/2 கப் சீரகம்  -1/4 ஸ்பூன்  பூண்டு -3 பச்சை மிளகாய் -2 கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி செய்முறை: கருப்பு மொச்சையை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.  கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊ‌ற்றவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ‌‌கடுகு, உளுந்து, வெந்தயம் போ‌ட்டு பொரிந்ததும்  கறிவேப்பிலை,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம். த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம்  ‌மிளகா‌ய் தூ‌ள், தனியா தூள்,  கரம்மசாலா, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம். ஊ‌றிய  மொச்சையை போ‌ட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல் மற்றும்  தண்ணீர் ச

காட்டு கீரை கடைசல்/ Kaatu keerai kadaisal/ Keerai kadaisal/ Spinach curry/ Kadaintha Keerai / Mashed Spinach/ Spinach Paruppu Masiyal/ Spinach Masiyal

தேவையான பொருட்கள்: காட்டு கீரை - 1 கட்டு வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்   வர மிளகாய் - 5 பூண்டு - 4 தக்காளி - 1 சாம்பார்  வெங்காயம் - 10 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் - 1 டீஸ்பூன் புளி தண்ணீர் - சிறிது பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் காட்டு கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு கொதித்ததும் நன்றாக கழுவி அலசி வைத்துள்ள கீரை,  வேகவைத்த துவரம் பருப்பு, மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், புளி தண்ணீர், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கீரையை நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதனை மத்து கொண்டு நன்கு கடைந்ததால்  காட்டு கீரை கடைசல் தயார் ..  வாரம் ஒருமுறை கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் அனைவருக்கும் நன்கு தெரிந்த கீரையான காட்டு கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

கொ‌ண்டை‌க் கடலை‌க் புளிகுழ‌ம்பு/Kondai Kadalai PuliKuzhambu/Channa Curry/Chickpeas Curry

தேவையானப் பொருட்கள்: கறுப்பு கொண்டைக் கடலை -2 கப் வெங்காயம் - 10 தக்காளி - 1  பூண்டு -10 பச்சை மிளகாய் - 3 ‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன் தனியா தூள்  -2 ஸ்பூ‌ன் கரம்மசாலா -1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் ‌கடுகு -1/4 ஸ்பூன்  உளுந்து -1/4 ஸ்பூன் வெந்தயம்  - 1/4 ஸ்பூன் புளி- 1/4 கப் உ‌ப்பு அரைப்பதற்கு: தேங்காய்- 1/2 கப் சீரகம்  -1/4 ஸ்பூன்  பூண்டு -3 பச்சை மிளகாய் -2 கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி செய்முறை: கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊ‌ற்றவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ‌‌கடுகு, உளுந்து, வெந்தயம் போ‌ட்டு பொரிந்ததும்  கறிவேப்பிலை,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம். த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம்  ‌மிளகா‌ய் தூ‌ள், தனியா தூள்,  கரம்மசாலா, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம். ஊ‌றிய கடலையை போ‌ட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல் மற்றும்  தண்ணீர் சேர்த்

தக்காளி குழம்பு/ Thakkali kuzhambu/Tomato curry

தேவையான பொருட்கள்: தக்காளி - 4 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) துருவிய தேங்காய் - 1/2 கப் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை – சிறிது  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - தேவையான அளவு  செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் தேங்காய், வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை வாணலியில் உள்ள தக்காளி கிரேவியுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், தக்காளி குழம்பு ரெடி. 

தக்காளி இடியாப்பம்/ Thakkali Idiyappam/ Tomato sevai/ Thakkali sevai

தேவையான பொருட்கள்: சேமியா  வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  நெய் - 1 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  சீரகம் - 1/2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது  செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியாப்பத்தை போட்டு நன்கு பிரட்டி, பின் அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியாப்பம் ரெடி!

பசலைக்கீரை கூட்டு/Pasalai Keerai Kootu/ Spinach kootu

தேவையான பொருட்கள்: பசலைக்கீரை - 1 கட்டு  பாசிப் பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)  உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பூண்டு - 5 பற்கள் பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காயை  போட்டு கிளறி இறக்கினால், பசலைக்கீரை கூட்டு ரெடி.

உருளைக்கிழங்கு சாண்ட்விச்/Urulaikilangu Sandwich/ Potato Sandwich bread

தேவையான பொருட்கள்: பிரட் - 6 துண்டுகள் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) உப்பு - தேவையான அளவு  கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மற்றும் சீஸ் - தேவையான அளவு செய்முறை: முதலில் மசித்த உருளைக்கிழங்குடன், கொத்தமல்லி, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிரட் துண்டின் மேல் மசித்த உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, தோசைக்கல்லின் மேல் வைத்து சூடேற்ற வேண்டும். இதேப் போல் மற்றொரு பிரட் துண்டின் மேலும் செய்து, தோசைக்கல்லில் வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு கலவையின் மேல் வெண்ணெய் தடவி திருப்பிப் போட்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். பிறகு இரண்டு பிரட்டிலும் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையின் மீதும் துருவிய சீஸை வைத்து, இரண்டையும் ஒன்றாக இணைத்து, பின் இரண்டு புறமும் வெண்ணெய் தடவி, பொன்னிறமாக பிரட்டி எடுக்க வேண்டும். 

காளான் வறுவல்/Kalan Varuval/Mushroom fry

தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். நன்கு வெந்த பின், அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும். 

குடைமிளகாய் சாதம்/ kudai milagai sadam/ Capsicum rice/ bell pepper rice

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)  கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்  மல்லி - 2 டீஸ்பூன் வரமிளகாய் - 4 சீரகம் - 2 டீஸ்பூன் வேர்க்கடலை - 1 கையளவு கறிவேப்பிலை – சிறிது  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மற்றும் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குடைமிளகாய் மற்றும் எண்ணெய் தவிர, அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் கரம் மசாலாவை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குடைமிளகாயானது நன்கு வெந்ததும், அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு சாதத்துடன் உப்பு மற்றும் கொத்தமல்லி  சேர்த்து நன்கு கலக்கவும் .  

காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup

தேவையான பொருட்கள்:  காளான்  - கால் கிலோ தண்ணீர் - 1 கப் வெங்காயம்- 5 தக்காளி-1  பூண்டு -5 பச்சை மிளகாய்-2 மிளகு பவுடர்- சிறிதளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை: முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

கேரட் சாதம்/Carrot sadam/Carrot rice

தேவையான பொருட்கள்: அரிசி -1 கப் (வேண்டுமென்றால் பச்சரிசி) தண்ணீர் - 4 கப் கேரட் - 2 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ் ஸ்பூன் பட்டை மற்றும் பிரிஞ்சி இலை - 2 இலவங்கம் - 3 தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் -10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 சோம்பு -1 டீஸ் ஸ்பூன் நெய் -1 டீஸ் ஸ்பூன் நல்லெண்ணை - 2 டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள் -1 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ் ஸ்பூன் உப்பு, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை – சிறிது செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, இலவங்கம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் துருவிய கேரட் மற்றும் அரிசியை போட்டு வதக்கி அத்துடன் தண்ணீர் சேர்க்கவும். பிறகு நெய் ஊற்றி குக்கரை முடி மூன்று விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.