Skip to main content

Entertainment


Comments

Popular posts from this blog

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல

முருங்கைகாய் சாம்பார்/ Murungaikai Sambar/ Murungaikai Kuzhambu/ Drumstick Sambar/ Drumstick Curry

தேவையான பொருட்கள்: முருங்கைகாய்- 2 உருளைக்கிழங்கு -2 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு...... நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி  செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கக்காய், உருளைக்கிழங்கு,  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு

ரவா லட்டு/ Rava laddu/ Rava Ladoo

தேவையான பொருட்கள்: ரவை - ஒரு கப் (150 கி) சர்க்கரை - அரை கப் (75 கி) துருவிய தேங்காய் - அரை கப் முந்திரி - 7 உலர்ந்த திராட்சை - சிறிது ஏலக்காய் - 1 நெய் - தேவைக்கு ஏற்ப பால் - தேவைக்கு ஏற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர், அதே கடாயில் துருவிய தேங்காயை ஈரம் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயுடன், வறுத்து வைத்துள்ள ரவை, முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்த்து  ஒன்றாக கலக்கவும். பிறகு அந்த கலவையில் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும். பிறகு கலவையை வேறொரு தட்டுக்கு மாற்றி இளஞ்சூட்டிலேயே சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.  பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து