Skip to main content

Health Tips


உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான மருந்து மிளகு.
மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால்தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம். உணவில் காரத்தை கூட்டவும், கூடுதல் சுவையை ஏற்படுத்தவும் கருப்பு மிளகு பயன்படுகிறது.

ஆனால், எளிமையான இந்த மிளகை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பல மருத்துவ காரணங்களுக்காக நம் முன்னோர்கள் உணவுகளில் பயன்படுத்தினர்.

1. மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் இருக்க கருப்பு மிளகு உதவுகிறது. மிளகில் உள்ள பப்பெரைன் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை மஞ்சளுடன் கலக்கும்போது, புற்று நோய் எதிர்ப்பு   அதிகரிக்கிறது .

2. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். (மருந்து வீறு என்பது கடும்  மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல் போன்றவையாகும்.)

3. அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலை பாரம், தலைவலி  தீரும்.

4. மிளகு 4 கிராம், பெருங்காயம் 1 கிராம், கழற்சிப்பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்துத் தேனில் அரைத்து 200 மி.கிராம்  எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல்,  யானைக்கால் காய்ச்சல் ஆகியவை தீரும்.

5. மிளகைப் புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி தீரும்.

6. மிளகு, சந்தனம், கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மேல் பூச குணமாகும். மிளகுத்தூள்  1 மி.கிராம், சிறிய வெங்காயம் இரண்டு, அரை கிராம் உப்பு இம்மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில்  தடவி வர புழு வெட்டு நிற்கும்.

7. 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து உருட்டி நாள்தோறும் காலையில் விழுங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தைந்து நாட்கள் சாப்பிட நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.

8. மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த  சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும். மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.



Comments

Popular posts from this blog

காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup

தேவையான பொருட்கள்:  காளான்  - கால் கிலோ தண்ணீர் - 1 கப் வெங்காயம்- 5 தக்காளி-1  பூண்டு -5 பச்சை மிளகாய்-2 மிளகு பவுடர்- சிறிதளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை: முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...

வாழைக்காய் கடலை பருப்பு கூட்டு/Vazhakkai Kadalaiparuppu Kootu/ Vazhakkai kootu/ Raw banana kootu/Raw banana Curry/Chettinadu Vazhakkai Kadalaiparuppu Kootu

தேவையான பொருட்கள்: வாழைக்காய்   - 1 கப் கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 தக்காளி -1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் வாழைக்காய் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு   வேகவைத்து எடுத்து கொள்ளவும்.   ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம்   மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை  சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி நன்கு வேகவைக்கவும். பின்  அதில்  வேகவைத்துள்ள வாழைக்காய் சேர்த்து  நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்...