Skip to main content

பீட்ரூட் பருப்பு கூட்டு/Beetroot paruppu kootu/ Beetroot Moong Dal/Beetroot Poriyal / Beetroot Moong Dal Stir Fry/Beetroot Kootu

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட்   - 1 கப்

பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

தேங்காய் - சிறிது

தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

 கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய வைத்துள்ள பீட்ரூட் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பீட்ரூட்  பருப்பு கூட்டு ரெடி.....

Comments

Popular posts from this blog

காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup

தேவையான பொருட்கள்:  காளான்  - கால் கிலோ தண்ணீர் - 1 கப் வெங்காயம்- 5 தக்காளி-1  பூண்டு -5 பச்சை மிளகாய்-2 மிளகு பவுடர்- சிறிதளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை: முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

எலுமிச்சை சாதம்/ Elumichai Sadham/ Lemon Rice

தேவையான பொருட்கள்: வடித்த சாதம்- 2 கப் எலுமிச்சை சாறு - 3 தாளிக்க: நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய்வற்றல்- 2 பெருங்காயம்- சிறிதளவு மஞ்சள் தூள்- சிறிதளவு உப்பு- சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி செய்முறை: சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது). வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும். எழுமிச்சை சாறு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்  ஊற்றி கடுகு, உழுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு பிழிந்த எழுமிச்சை சாறை ஊற்றி மஞ்சள்,  பெருங்காயம்  மற்றும் தேவையான அளவு  உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். ஆறின சாதத்துடன் எழுமிச்சை கரைசலை கொட்டிக் கிளறவும்.  கொத்தமல்லி தூவிப் கிளறவும் சுவையான எலுமிச்சை சாதம் தயார்...... கலர்புல்லாக இருக்கவேண்டும் என்றால் துருவிய கேரட்டை துவி அலங்கரிக்கலாம்.  அவித்த முட்டை,  சிக்கன், மட்டன், மீன் பிரை...

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...