Skip to main content

கேரட் பருப்பு கூட்டு/Carrot paruppu kootu/ Carrot Moong Dal/Carrot Poriyal / Carrot Moong Dal Stir Fry/Carrot Kootu

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட்  - 1 கப்

பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

தேங்காய் - சிறிது

தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

 கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய வைத்துள்ள கேராட்டை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கேரட் நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், கேரட் பருப்பு கூட்டு ரெடி.....



Comments

Popular posts from this blog

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...

குடைமிளகாய் சாதம்/ kudai milagai sadam/ Capsicum rice/ bell pepper rice

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)  கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்  மல்லி - 2 டீஸ்பூன் வரமிளகாய் - 4 சீரகம் - 2 டீஸ்பூன் வேர்க்கடலை - 1 கையளவு கறிவேப்பிலை – சிறிது  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மற்றும் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குடைமிளகாய் மற்றும் எண்ணெய் தவிர, அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் கரம் மசாலாவை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குடைமிளகாயானது நன்கு வெந்ததும், அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு சாதத்துடன் உப்பு மற்றும் கொத்தமல்லி  சேர்த்து நன்கு கலக்கவும் .  

பசலை கீரை பருப்பு கூட்டு/ Pasalai Keerai Kootu/ Spinach kootu/ dal palak

தேவையான பொருட்கள்: பசலை கீரை- 1 கட்டு துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய்...