அவரைக்காய் பொரியல்/Avarakkai Poriyal/ Broad beans Poriyal/ Broad Beans stir-fry/ Chettinad Avarakkai Poriyal
அவரைக்காய் - 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய்-5
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் நறுக்கிய அவரைக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும் அவரைக்காய் நன்கு வெந்து தண்ணீர் முற்றீலும் வற்றியவுடன் அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கினால், அவரைக்காய் பொரியல் தயார் .....
Comments
Post a Comment