Skip to main content

கோதுமை ரவா உப்புமா/Godhumai rava upma /Cracked Wheat Rava Upma/Broken Wheat Rava Upma


தேவையான பொருட்கள்:
கோதுமை ரவா - 1 கப்
வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
துருவிய தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கேற்றவாறு

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் கோதுமை ரவாவைப் போட்டு, சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் எண்ணையை விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப்போட்டு, பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், 2 கப் தண்ணீரும், சிறிது துருவிய தேங்காய், கொத்தமல்லி  மற்றும்  உப்பும் சேர்த்துக் கலக்கி மூடி வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவாவைக் கொட்டிக் கிளறவும். அடுப்பைத் தணித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்பொழுது, திறந்து கிளறி விட்டு, நீர் வற்றி உப்புமா நன்றாக வெந்தவுடன் இறக்கி விடவும்.




Comments

Popular posts from this blog

காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup

தேவையான பொருட்கள்:  காளான்  - கால் கிலோ தண்ணீர் - 1 கப் வெங்காயம்- 5 தக்காளி-1  பூண்டு -5 பச்சை மிளகாய்-2 மிளகு பவுடர்- சிறிதளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை: முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...

காளான் வறுவல்/Kalan Varuval/Mushroom fry

தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். நன்கு வெந்த பின், அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும்.