Skip to main content

கத்தரிக்காய் மொச்சைபயிறு புளிகுழ‌ம்பு/Kathirikai Mochai Payaru PuliKuzhambu/Brinjal Mochai Kottai Kara Kuzhambu/ Brinjal Mochai Curry

தேவையானப் பொருட்கள்:
மொச்சைபயிறு -2 கப்
கத்தரிக்காய்- 3
முருங்கக்காய் -1
வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு -10
பச்சை மிளகாய் - 3
‌‌மிளகா‌ய் தூள் - 1 ‌ஸ்பூ‌ன்
தனியா தூள்  -2 ஸ்பூ‌ன்
கரம்மசாலா -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
சோம்பு -1/4 ஸ்பூன்
வெந்தயம்  - 1/4 ஸ்பூன்
புளி கரைசல் - 1/4 கப்
உ‌ப்பு
அரைப்பதற்கு:
தேங்காய்- 1/2 கப்
சீரகம்  -1/4 ஸ்பூன்
பூண்டு -3
கறிவேப்பிலை, கொ‌த்தும‌ல்‌லி

செய்முறை:

கருப்பு மொச்சையை வறுத்து இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊ‌ற்றவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் வெந்தயம் மற்றும் சோம்பு போ‌ட்டு பொரிந்ததும்  கறிவேப்பிலை,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாக வதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம். த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம்  ‌மிளகா‌ய் தூ‌ள், தனியா தூள்,  கரம்மசாலா, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றை போ‌டவு‌ம். பின் கத்தரிக்காய், முருங்கக்காய் மற்றும் ஊ‌றிய  மொச்சையை போ‌ட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல் மற்றும்  தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வையு‌ங்க‌ள். பிறகு அரைத்த தேங்காய் மசாலாவை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் கத்தரிக்காய் மொச்சைபயிறு புளிகுழ‌ம்பு தயார்.


கு‌க்க‌‌‌ரி‌ல் இ‌ல்லாம‌ல் பா‌த்‌திர‌த்‌திலு‌ம் செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் அத‌ற்கு  மொச்சையை மு‌ன்னரே வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ம‌ற்றவைகளை ‌அ‌ப்படியே செ‌ய்யலா‌ம்.


Comments

Popular posts from this blog

காளான் சூப்/Kalan Soup/ Mushroom Soup

தேவையான பொருட்கள்:  காளான்  - கால் கிலோ தண்ணீர் - 1 கப் வெங்காயம்- 5 தக்காளி-1  பூண்டு -5 பச்சை மிளகாய்-2 மிளகு பவுடர்- சிறிதளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி செய்முறை: முதலில் காளான், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு  5 நிமிடம் ஊற வைத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு காளானுடன் தண்ணீர், வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு  போட்டு வேகவைக்கவும். பிறகு அத்துடன்   மிளகு பவுடர் மற்றும் கொத்தமல்லி போட்டு பருகவும்.

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...

வாழைக்காய் கடலை பருப்பு கூட்டு/Vazhakkai Kadalaiparuppu Kootu/ Vazhakkai kootu/ Raw banana kootu/Raw banana Curry/Chettinadu Vazhakkai Kadalaiparuppu Kootu

தேவையான பொருட்கள்: வாழைக்காய்   - 1 கப் கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 10 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 தக்காளி -1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் வாழைக்காய் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு   வேகவைத்து எடுத்து கொள்ளவும்.   ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம்   மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை  சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி நன்கு வேகவைக்கவும். பின்  அதில்  வேகவைத்துள்ள வாழைக்காய் சேர்த்து  நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்...