Skip to main content

வெண்டைக்காய் மசால் குழம்பு / கூட்டு/Ladies finger kootu/ Ladies finger Curry/ Ladies finger gravy/bhindi masala gravy/bhindi Curry


தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்   - 2 கப் (நறுக்கியது)

வெங்காயம் - 10 (நறுக்கியது)

பூண்டு- 10

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

தக்காளி -2 (நறுக்கியது)

துருவிய தேங்காய் -சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

சாம்பார் தூள் -3 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

 கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சோம்பு -1/2 டீஸ்பூன்

 கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது


செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் நன்கு வதக்கி  தனியாக எடுத்து கொள்ளவும். 
பிறகு  மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலை  போட்டு வதக்கவும்.  பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, துருவிய தேங்காய்  மற்றும் சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக  போட்டு நன்கு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பிறகு  மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு கிளறவும்.  பிறகு வதக்கிய  வெண்டைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  அதில் மஞ்சள் தூள்  மற்றும் சாம்பார் தூள் சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பின்  தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க  வைக்க வேண்டும்.  பிறகு கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வெண்டைக்காய் மசால் குழம்பு / கூட்டு ரெடி.....


Comments

Popular posts from this blog

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல

பசலை கீரை பருப்பு கூட்டு/ Pasalai Keerai Kootu/ Spinach kootu/ dal palak

தேவையான பொருட்கள்: பசலை கீரை- 1 கட்டு துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கி

முருங்கைகாய் சாம்பார்/ Murungaikai Sambar/ Murungaikai Kuzhambu/ Drumstick Sambar/ Drumstick Curry

தேவையான பொருட்கள்: முருங்கைகாய்- 2 உருளைக்கிழங்கு -2 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு...... நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி  செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கக்காய், உருளைக்கிழங்கு,  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு