தேவையான பொருட்கள்:
பிரட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன் மற்றும் சீஸ் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மசித்த உருளைக்கிழங்குடன், கொத்தமல்லி, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிரட் துண்டின் மேல் மசித்த உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, தோசைக்கல்லின் மேல் வைத்து சூடேற்ற வேண்டும். இதேப் போல் மற்றொரு பிரட் துண்டின் மேலும் செய்து, தோசைக்கல்லில் வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு கலவையின் மேல் வெண்ணெய் தடவி திருப்பிப் போட்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். பிறகு இரண்டு பிரட்டிலும் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையின் மீதும் துருவிய சீஸை வைத்து, இரண்டையும் ஒன்றாக இணைத்து, பின் இரண்டு புறமும் வெண்ணெய் தடவி, பொன்னிறமாக பிரட்டி எடுக்க வேண்டும்.
Comments
Post a Comment