தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 ஆழாக்கு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை
கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தவும். பின் அதனை
மிக்சியில் போட்டு மாவாக அரைக்கவும். பிறகு, அதனை கட்டிகள் இன்றி நன்கு
சலிக்கவும். கட்டிகளை மிக்சியில் அரைத்து சலித்து, மாவுடன் சேர்க்கவும்.
இந்த மாவை சற்று அதிகமாகச் செய்து, 2 மாதங்கள் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். தேவையான போது சிறிது மாவு எடுத்து இடியாப்பம் செய்யலாம்.
இடித்த மாவை வறுத்தும் இடியாப்பம் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில்
சிறிது மாவை எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க
வைக்கவும். மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, ஒரு
கரண்டிக் காம்பால் கிளறவும். மாவு நன்கு சேர்ந்து கெட்டியாக ஆனதும், நன்கு
சேர்த்துப் பிசையவும். மாவை இடியாப்பக் குழலில் போட்டு, இட்லி தட்டுகளில்
பிழிந்து, இட்லி பானையில் வேக வைத்தால் சுவையான இடியாப்பம் தயார் ...
Comments
Post a Comment