Skip to main content

முட்டைபொடிமாஸ் /Muttai Podimas/Egg Stir Fry /Chettinad Egg Scramble /Egg Podimas

தேவையான பொருட்கள்:
முட்டை -4
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
பெப்பர் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி-1
சிவப்பு மிளகாய் - 4
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு-1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு பொரிந்ததும் வெங்காயம், மிளகாய் மற்றும்  தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர்  போட்டு கிளறி இறக்கினால், முட்டைபொடிமாஸ் தயார் .....

Comments

Popular posts from this blog

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல

பசலை கீரை பருப்பு கூட்டு/ Pasalai Keerai Kootu/ Spinach kootu/ dal palak

தேவையான பொருட்கள்: பசலை கீரை- 1 கட்டு துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கி

முருங்கைகாய் சாம்பார்/ Murungaikai Sambar/ Murungaikai Kuzhambu/ Drumstick Sambar/ Drumstick Curry

தேவையான பொருட்கள்: முருங்கைகாய்- 2 உருளைக்கிழங்கு -2 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு...... நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி  செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கக்காய், உருளைக்கிழங்கு,  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு