Skip to main content

கேரட் சாதம்/Carrot sadam/Carrot rice

தேவையான பொருட்கள்:

அரிசி -1 கப் (வேண்டுமென்றால் பச்சரிசி)

தண்ணீர் - 4 கப்

கேரட் - 2 கப் (துருவியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ் ஸ்பூன்

பட்டை மற்றும் பிரிஞ்சி இலை - 2

இலவங்கம் - 3

தக்காளி - 2 (நறுக்கியது)

வெங்காயம் -10 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

சோம்பு -1 டீஸ் ஸ்பூன்

நெய் -1 டீஸ் ஸ்பூன்

நல்லெண்ணை - 2 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் -1 டீஸ் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ் ஸ்பூன்

உப்பு, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை – சிறிது


செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, இலவங்கம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் துருவிய கேரட் மற்றும் அரிசியை போட்டு வதக்கி அத்துடன் தண்ணீர் சேர்க்கவும். பிறகு நெய் ஊற்றி குக்கரை முடி மூன்று விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

காளான் வறுவல்/Kalan Varuval/Mushroom fry

தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். நன்கு வெந்த பின், அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும். 

கேரட் பருப்பு கூட்டு/Carrot paruppu kootu/ Carrot Moong Dal/Carrot Poriyal / Carrot Moong Dal Stir Fry/Carrot Kootu

தேவையான பொருட்கள்: துருவிய கேரட்  - 1 கப் பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய வைத்துள்ள கேராட்டை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கேரட் நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு...

முருங்கை கீரை சாம்பார்/ Murungai Keerai Sambar/ Murungai Keerai Kuzhambu/ Drumstick Leaves Sambar/ Drumstick Leaves Curry/ Keerai sambar

தேவையான பொருட்கள்: முருங்கை கீரை- 1 கப் முருங்கக்காய் -1 துவரம் பருப்பு -1/2 கப் வெங்காயம்-15 தக்காளி-1 பச்சை மிளகாய்-3 புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் சாம்பார் தூள்-3 டீஸ்பூன் பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் -சிறிது தாளிப்பதற்கு......  நல்லெண்ணெய் -2 டீஸ்பூன் கடுகு- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன் சோம்பு-1/2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்-4 கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி   செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் முருங்கை கீரை, முருங்கக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துர...