Skip to main content

மிருதுவான இட்லி/மிருதுவான இட்லி மாவு /miruthuvana idly / idly batter for soft idly/fluffy idly


தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி -3 கப்
பச்சரிசி -1/4 கப்
உளுந்து -1 கப்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவையானளவு
தண்ணீர் - -தேவையானளவு

செய்முறை:
பாத்திரத்தில்  தண்ணீர்  போட்டு  இட்லி அரிசி மற்றும் பச்சரிசி  போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் மற்றொரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறிய பிறகு தனித்தனியாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு போட்டு புளிக்க வைக்கவும்.  5 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி அவித்து எடுத்தால் மிருதுவான இட்லி தயார்...

Comments

Popular posts from this blog

காளான் வறுவல்/Kalan Varuval/Mushroom fry

தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். நன்கு வெந்த பின், அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும். 

பசலை கீரை பருப்பு கூட்டு/ Pasalai Keerai Kootu/ Spinach kootu/ dal palak

தேவையான பொருட்கள்: பசலை கீரை- 1 கட்டு துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து ) வெங்காயம் - 10 (நறுக்கியது)  மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது செய்முறை: கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய்...

கேரட் பருப்பு கூட்டு/Carrot paruppu kootu/ Carrot Moong Dal/Carrot Poriyal / Carrot Moong Dal Stir Fry/Carrot Kootu

தேவையான பொருட்கள்: துருவிய கேரட்  - 1 கப் பாசிப் பருப்பு/கடலை பருப்பு  - 1/4 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேங்காய் - சிறிது தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் துருவிய வைத்துள்ள கேராட்டை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்  சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கேரட் நன்கு வெந்ததும், அதில் பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு...